தமிழ்நாடு

tamil nadu

மரபுவழி கழிவுகளை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!

By

Published : Sep 12, 2020, 10:43 PM IST

திருவண்ணாமலை : தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மரபுவழி கழிவுகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார்.

மரபுவழி கழிவுகளை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!
மரபுவழி கழிவுகளை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!

திருவண்ணாமலை நகராட்சி ஈசானியம் மைதானத்தில் சுமார் 13.64 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை கோயிலில் பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி, தீபத்திருவிழா நாள்களில் 120 முதல் 270 மெட்ரிக் டன் வரை சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த ஈசானிய மைதானத்தில் அமைந்துள்ள உரக்கிடங்கில் தான் சேகரிக்கப்படுகிறது.

இதன் காரணமாக நிலம், காற்று, நிலத்தடி நீர் மாசுபடுதல், குப்பை கூலம் தீப்பற்றி எரிவது போன்றவை ஏற்படுகிறது. இந்நிலையில், இதனை தடுக்கும் வகையில் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகமானது, நகராட்சியில் உள்ள மரபுவழி குப்பைகளை அகற்ற தூய்மை பாரத திட்டத்தின் மூலம் ரூ. 3.6 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது, அங்கு ரூ. 1.25 கோடி மதிப்பில் புதிதாக வாங்கப்பட்ட 100 டன் திறன் கொண்ட நவீன ராட்சத இயந்திரத்தின் மூலம் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு, குப்பைகளை அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி இன்று (செப்டம்பர் 12) நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புதிதாக வாங்கப்பட்டுள்ள இந்த அதி நவீன ராட்சத இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 100 டன் குப்பைகளை பிரித்து எடுக்கப்படுகிறது. இப்பணிகள் அடுத்த ஆறு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details