தமிழ்நாடு

tamil nadu

வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் - சிபிஐ அறிவிப்பு!

By

Published : Oct 1, 2020, 4:47 PM IST

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் வரும் அக்.12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் - சி.பி.ஐ அறிவிப்பு!
வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் - சி.பி.ஐ அறிவிப்பு!

திருவாரூர்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் வரும் அக்.12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி. சீனிவாசராவின் நினைவு நாள் இன்று(அக்.1) அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மத்திய அரசு கரோனா நெருக்கடி காலத்தைப் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், நாட்டு மக்களுக்கு எதிராகவும் சட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதை கைவிட வேண்டும். இதைக் கண்டித்து, வரும் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மத்திய அரசு எந்த சட்டம் கொண்டுவந்தாலும், அதை தடுப்பது தான் எதிர்க்கட்சிகளின் வேலை எனக் கூறுவதால், மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்கள் மக்கள் நல சட்டங்களாகிவிடாது. இது மக்களுக்கு எதிரான சட்டம். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப செய்தால் உண்மையாகி விடாது. நாசிகளின் தலைவர் ஹிட்லரைப் போல தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது.

மத்திய அரசு கொண்டு வருகிற அனைத்தும் சட்டங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமி உறுதுணையாக நிற்கிறார். அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் தான் சட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோத போக்கைக் கண்டித்து, தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details