தமிழ்நாடு

tamil nadu

”மத்திய அரசுத் திட்டங்களில் யார் ஊழல் செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!” - கருப்பு முருகானந்தம்

By

Published : Sep 19, 2020, 2:17 PM IST

திருவாரூர் : மத்திய அரசின் திட்டங்களில் அரசியல்வாதிகள் யார் ஊழல் செய்தாலும் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜக மாநில துணைச் செயலர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

Bjp
Bjp

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பரவக்கோட்டை கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மாநில துணைச் செயலர் கருப்பு முருகானந்தம் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திருவாரூர் பாஜக மாநில துணைச் செயலர் கருப்பு முருகானந்தம்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கருப்பு முருகானந்தம், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பாஜக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் வெற்றியை சந்திக்க போகிறோம் என்பதையே காட்டுகிறது.

செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைச் செயலர் கருப்பு முருகானந்தம்

மக்களுக்கு கிடைக்கக்கூடிய மத்திய அரசின் திட்டங்களில் அலுவலர்கள், அரசியல்வாதிகள் என எவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசு இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மத்திய அரசின் கவனத்திற்கு இது எடுத்துச் செல்லப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details