தமிழ்நாடு

tamil nadu

'சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட கரூர் விவசாயிகளுக்கு மூன்று மடங்கு நிவாரணம்' - எம்.ஆர். விஜயபாஸ்கர்

By

Published : Oct 12, 2020, 3:53 AM IST

கரூர்: நொய்யல் ஆற்று சாயக் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சென்ற ஆண்டை விட மூன்று மடங்கு இழப்பீடு பெற்றுத் தரப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.

சாயக் கழிவால் பாதிக்கப்பட்ட கரூர் விவசாயிகளுக்கு மூன்று மடக்பு நிவாரணம் வழங்கப்படும்!
சாயக் கழிவால் பாதிக்கப்பட்ட கரூர் விவசாயிகளுக்கு மூன்று மடக்பு நிவாரணம் வழங்கப்படும்!

சாயக்கழிவு தொழிற்சாலையால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றுநீர் பாசன கரூர் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டம் கரூரை அடுத்த மண்மங்கலத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மண்டபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

அப்போது விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் நொய்யல் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சென்ற ஆண்டு பத்தாயிரம் ரூபாய் நிவாரணமாக பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இந்தாண்டு, அந்த தொகை மூன்று மடங்காக பெற்று தரப்படும். அதாவது, நாற்பதாயிரம் பெற்றுத் தரப்படும்.

நொய்யல் ஆற்றின் சாயக்கழிவு நீரால் கரூரில் மட்டும் 6,500 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டு உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறியும் தொடர் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கும் இழப்பீடு தொகை பெற்றுக் கொடுக்கப்படும்.

பாதிப்பை கண்டறியாத விவசாயிகள் இருந்தாலோ அல்லது உரிய இழப்பீட்டை விவசாயிகள் பெறவில்லை என்றாலோ அந்த தொகை அனைத்தும் அரசின் கஜானாவுக்கு சென்றுவிடும்" என தெரிவித்தார்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆற்றுநீர் பாசன விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details