தமிழ்நாடு

tamil nadu

விமான நிலையத்தின் பார்சலில் துப்பாக்கி - அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்!

By

Published : Sep 27, 2020, 6:11 AM IST

சென்னை : விமானம் மூலமாக நாகலாந்திற்கு அனுப்பப்பட இருந்த பொதிகளில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலையத்தின் பார்சலில் துப்பாக்கி - அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்!
விமான நிலையத்தின் பார்சலில் துப்பாக்கி - அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்!

சென்னை, விமான நிலையத்தின் சரக்கு பிரிவுக்கு வந்த பொதிகளை (பார்சல்கள்) வழக்கம் போல தனியார் விமான நிறுவன ஊழியர்கள் நேற்று (செப்.26) ஆய்வு செய்தனர்.

அப்போது, சென்னையில் இருந்து கொல்கத்தா வழியாக நாகலாந்திற்கு அனுப்ப 11 பார்சல்கள் சரக்கு பிரிவிற்கு வந்துள்ளன. அந்தப் பொதிகளை ஸ்கேனிங் செய்தபோது அதில் ஒன்றில் விளையாட்டுகளில் பயன்படுத்தக் கூடிய ஏர்-கன் துப்பாக்கி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தனியார் விமான நிறுவன ஊழியர்கள், இது குறித்து விமான காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பார்சல் நிலையத்திற்கு வந்த காவல் துறையினர் துப்பாக்கியை பறிமுதல் செய்து, இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.

முதல்கட்ட விசாரணையில், அந்தப் பொதி திண்டுக்கலில் இருந்து கொரியர் முலமாக சென்னை வந்துள்ளது என்பதும், சென்னையிலிருந்து கொல்கத்தா வழியாக நாகலாந்து மாநிலத்தின் திம்மபூர் பகுதிக்கு அது அனுப்பப்பட திட்டமிடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் விமான நிலையக் காவலர்கள், ”இத்துப்பாக்கியை அனுப்பிய நபர் யார்? எதற்காக அனுப்பினார்?” உள்ளிட்டவை குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details