தமிழ்நாடு

tamil nadu

இறந்த இணையை காப்பாற்ற சிட்டுக்குருவியின் பாச போராட்டம்!

By

Published : May 31, 2020, 5:11 PM IST

திருப்பூர்: இறந்து போன தனது இணையை காப்பாற்ற சிட்டுக்குருவி நடத்திய பாச போராட்டம் காண்போரை நெகிழ்ச்சியடை வைத்தது.

சிட்டுக்குருவியின் பாசப்போராட்டம்
சிட்டுக்குருவியின் பாசப்போராட்டம்

காங்கேயம் திருப்பூர் சாலையில் சென்னியப்ப தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வணிகவரித் துறை அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் முன்பு மரத்தின் அருகே ஒரு சிட்டுக்குருவி இறந்து கிடந்தது. இறந்த சிட்டுக்குருவியை தேடி அதன் இணை சிட்டுக்குருவியும், அந்த இடத்திற்கு வந்தது. தனது இணை சிட்டுக்குருவி இறந்ததுகூட தெரியாமல் எப்படியாவது அதன் உயிரை காப்பாற்றி விடலாம் என்று அந்த சிட்டுக்குருவி இரண்டு மணிநேரம் அதனை தன் அலகால் கொத்தி இழுப்பதும், புரட்டி போடுவதாகவும் போராடிய காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது.

இறந்த இணையை காப்பாற்ற போராடும் சிட்டுக்குருவி
இரு சிட்டுகுருவிகளும் அப்பகுதியில் உள்ள பழமையான வீட்டில் கூடு கட்டி வாழ்ந்து வருவதும், உணவு தேடச் சென்ற ஒரு சிட்டுக்குருவி மட்டும் மின்சாரம் தாக்கியோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தாலோ இறந்து விட்டது. ஏற்கனவே மின்காந்த அலைகளால் இது போன்ற சிறிய பறவையினங்கள் அழிந்து வருவதாக கூறப்படும் நிலையில், இவற்றை பாதுகாக்க மக்கள் முன்வரவேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details