தமிழ்நாடு

tamil nadu

பள்ளிக்கு வருவதில் அச்சம் தேவையில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

By

Published : Feb 6, 2021, 1:49 PM IST

திருப்பூர்: விருப்பப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் எனக் கூறியுள்ளதால் அச்சம் தேவையில்லை எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் தொடக்கப்பள்ளியை, தரம் உயர்த்தி நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்ட நிலையில், அதன் தொடக்க விழா இன்று (பிப். 6) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “வறட்சி நிலங்களில் குடிமராமத்துப் பணிகள், அத்திக்கடவு அவிநாசி போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் விவசாயிகள் நலன் கருதிதான் வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற அறிவிப்பு பொதுவாக தேர்தல் நேரங்களில் மட்டும்தான் அறிவிப்பது வழக்கம். ஆனால், முதலமைச்சர் சட்டப்பேரவையிலேயே அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது இந்தியாவே வியந்த ஒன்றாகும்" என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவது குறித்த கேள்விக்கு, "பள்ளிகள் நடைபெற வேண்டும். மாணவர்களின் கல்வி சிறக்க வேண்டும். விருப்பப்பட்ட மாணவர்கள் வரலாம் என்று கூறியுள்ளதால் அச்சம் தேவையில்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க...திருமண நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.726.31 கோடி... இதுமட்டுமல்ல இன்னும் இருக்கு! - தகவல் உள்ளே...

ABOUT THE AUTHOR

...view details