தமிழ்நாடு

tamil nadu

பறவை காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை சரிவு

By

Published : Jan 8, 2021, 5:56 AM IST

திருப்பூர்: பறவை காய்ச்சல் எதிரொலியாக கறிக்கோழி விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

கறிக்கோழி விலை சரிவு
கறிக்கோழி விலை சரிவு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து கோவை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கறிக்கோழிகள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

பல்லடத்தில் செயல்பட்டுவரும் கறிக்கோழி உற்பத்தி ஒருங்கிணைப்பு குழுவினர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி பறவை காய்ச்சல் காரணமாக, 14 ரூபாய் விலை குறைந்து 78 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும் 2 லட்சம் கறிக்கோழிகள் தேக்கம் அடைந்துள்ளன. வரும் காலங்களில் நோயின் தாக்கத்தை பொறுத்து கறிக்கோழி விலையில் மாற்றங்கள் ஏற்படும் என தெரிகிறது.

இதையும் படிங்க: கறிக்கோழியால் கரோனா பரவாது - சிக்கன் 65 பகோடாவை இலவசமாக வழங்கிய கடைக்காரர்

ABOUT THE AUTHOR

...view details