தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூரில் ஆண்நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி..போலீசார் நடவடிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 4:46 PM IST

திருப்பத்தூரில் ஆண்நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் நடவடிக்கை
திருப்பத்தூரில் ஆண்நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஆண்நண்பருடன் சேர்ந்து கணவனை மண் வெட்டியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை, புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜி. இவருடைய மகன் கோவிந்தராஜி (வயது 41). கூலி வேலை செய்து வரும் இவருக்கு காளீஸ்வரி (வயது 29) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் கணவர் வேலைக்கு சென்ற பிறகு அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 36) என்பவருடன் பேசி பழகி வந்துள்ளார். நாளடைவில் இது கள்ளகாதலாக மாறி கடந்த 5ஆண்டுகளாக இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.‌ இதை அறிந்த கணவர் கோவிந்தராஜி, மனைவியை‌ பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், ஆண் நண்பரை விட மனமில்லாத காளீஸ்வரி இதுகுறித்து கோவிந்தராஜிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் கோவிந்தராஜியை, ஆண் நண்பர் கோவிந்தராஜ் மது அருந்துவதற்காக அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து, மது போதையின் உச்சத்தில் இருந்த ஆண் நண்பர் கோவிந்தராஜ், காளீஸ்வரியை தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளார். அங்கு வந்த காளீஸ்வரி அவரது கணவர் கோவிந்தராஜியை கல்லால் தலையில் அடித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, மயங்கி கீழே விழுந்த கோவிந்தராஜியை மீண்டும் இருவரும் கல்லால் அடித்துள்ளனர். பின்னர் பிழைத்துக்கொள்வார் என எண்ணியவர்கள், அருகில் இருந்த மண்வெட்டியால் சரமாரியாக தலையில் வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலிலேயே இறந்துள்ளார்.

இதனையடுத்து, நிலத்தின் உரிமையாளர் நிலத்திற்கு வந்து கோவிந்தராஜின் உடலை பார்த்த உடன், இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏலகிரி மலை போலீசார் கோவிந்தராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலை நடைப்பெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு மேற்க்கொண்டு குற்றவாளிகளை‌ பிடிக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் செந்தில் தலையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கோவிந்தராஜின் மனைவி காளீஸ்வரியிடம் தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டதில், ஆண் நண்பருடன் சேர்ந்து, தன் கணவரை மண் வெட்டியால் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, காளீஸ்வரி மற்றும் ஆண் நண்பர் கோவிந்தராஜை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், மனைவியே ஆண் நண்பருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:வேலூரில் ஹைடெக் வசதிகளுடன் கூடிய அரசுப் பள்ளி..! கல்வியை சுகமாய் அனுபவிக்கும் மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details