தமிழ்நாடு

tamil nadu

ஆம்பூர் அருகே வெள்ளை காகம்: வைரலாகும் காணொலி

By

Published : Apr 19, 2021, 9:15 AM IST

Updated : Apr 19, 2021, 9:57 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தென்பட்ட வெள்ளை காகம் தொடர்பான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

white
white

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்குள்பட்ட வன்னியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரது வீட்டின் அருகில் நேற்று (ஏப்ரல் 18) மாலை வெள்ளை நிறமுடைய காகம் ஒன்று இரை தேடிவந்து தஞ்சம் அடைந்துள்ளது.

இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வெள்ளை காகம் சுவரின் மீது அமர்ந்திருக்கும் காட்சிகளைக் காணொலியாகவும், புகைப்படமாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அந்தக் காணொலி தற்போது ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Last Updated : Apr 19, 2021, 9:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details