தமிழ்நாடு

tamil nadu

'எங்க சாரை மாத்தாதீங்க':ஆசிரியருக்காக மாணவர்களின் பாசப்போராட்டம்

By

Published : Nov 14, 2022, 3:27 PM IST

திருப்பத்தூர் மாவட்ட அரசுப்பள்ளி ஒன்றில் பணிமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் தங்கள் பள்ளியில் பணியமர்த்த வேண்டி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியருக்காக மாணவர்களின் பாசப்போராட்டம்
ஆசிரியருக்காக மாணவர்களின் பாசப்போராட்டம்

திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த தும்பேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிமாற்றம் செய்யப்பட்ட இயற்பியல் ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 600 மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளியில், பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த வேலவன் என்பவர், கடந்த ஒரு வாரகாலத்திற்கு முன் பணிமாறுதல் பெற்று திருப்பத்தூரில் உள்ள அரசு மாடர்ன் பள்ளிக்கு சென்றார்.

இந்நிலையில், 'மீண்டும் தங்களது இயற்பியல் ஆசிரியர் வேலவன் தங்கள் பள்ளிக்கே வர வேண்டும்' என தும்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி நுழைவு வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் மற்றும் அம்பலூர் காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுனர். பின்னர் ஆசிரியர் வேலவனை, மீண்டும் தும்பேரி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அலுவலர்கள் வரவழைத்து, தர்ணா போராட்டத்தை கைவிட வலியுறுத்தியதின்பேரில், மாணவர்கள் கலைந்து சென்றனர். அப்போது, ஆசிரியரை மீண்டும் வரவழைக்க மாணவர்களின் பாசப்போராட்டம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

'எங்க சாரை மாத்தாதீங்க':ஆசிரியருக்காக மாணவர்களின் பாசப்போராட்டம்

இதையும் படிங்க:குன்றத்தூர் பணிமனையில் விபத்து.. காவலாளி மீது ஏறிய அரசு பேருந்து!

ABOUT THE AUTHOR

...view details