தமிழ்நாடு

tamil nadu

பறக்கும் படையா! விரட்டும் படையா!

By

Published : Mar 4, 2021, 8:43 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1.50 லட்சம் ரொக்கப்பணம் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் பறக்கும் படை
திருப்பத்தூர் பறக்கும் படை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னுக்குப் பின் முரணான பதிலில் சிக்கியவர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையில் சாய் சங்கீத் ஓட்டல் உரிமையாளருக்குச் சொந்தமான 1.50 லட்சம் பணத்தை ஓட்டலில் பணிபுரியும் ராஜன் என்பவர் காரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது தேர்தல்அலுவலர் பரந்தாமன் தலைமையிலான பறக்கும் படையினர் ஆவணங்களை பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் பறக்கும் படை

விசாரணையில் ஓட்டலிலிருந்து வங்கிக்குக் கொண்டு செல்வதாகவும், மற்றொருவர் வங்கியிலிருந்து ஓட்டலுக்குக் கொண்டு செல்வதாகவும் முன்னுக்குப் பின் முரணான தகவல் வகையில் பதில்அளித்துள்ளனர்.

சந்தேகமடைந்த தேர்தல் பறக்கும் படையினர் 1.50 லட்சம் பணத்தை பறிமுதல்செய்து வாணியம்பாடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய ஆவணங்கள்!

ABOUT THE AUTHOR

...view details