தமிழ்நாடு

tamil nadu

காணாமல் போன ஊராட்சி மன்ற தலைவர் மீட்பு! உறவினர் வீட்டில் தஞ்சமடைந்ததாக வாக்குமூலம்.. எதற்காக சென்றார் தெரியுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 7:41 AM IST

Missing Female panchayat president found: ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மனைவி காணவில்லை என கணவன் புகார் கொடுத்து இருந்த நிலையில், காணாமல் போன மனைவி மீட்கப்பட்டு உள்ளார்.

காவல் நிலையத்திற்கு தானாக முன் வந்த காணாமல் போன பெண் ஊராட்சி மன்ற தலைவர்
காவல் நிலையத்திற்கு தானாக முன் வந்த காணாமல் போன பெண் ஊராட்சி மன்ற தலைவர்

காவல் நிலையத்திற்கு தானாக முன் வந்த காணாமல் போன பெண் ஊராட்சி மன்ற தலைவர்

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட காமனூர் தட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி இந்துமதி. கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி, பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால் பாண்டியன் தனது மனைவி இந்துமதியை நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிற சமூகத்தினர் அதிகம் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியலின பிரிவினருக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டத்தை கண்டித்து நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் இந்துமதி தலைவர் பதவியிற்கு போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இருப்பினும் தேர்தலில் போட்டியிட்ட இந்துமதியை எதிர்த்து யாரும் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடாததால் அவர் போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் பாண்டியன் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அனைவருக்கும் அப்பகுதியில் எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பாண்டியன் தனது மனைவி இந்துமதி மற்றும் இரு ஆண் பிள்ளைகளுடன் மலைகிராமத்தை விட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாக சொல்லப்படுகிறடு. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இந்துமதி கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதையும் படிங்க:MP Kanimozhi: 'மக்கள் களம்' எம்.பி கனிமொழி எடுத்த உடனடி ஆக்‌ஷன்.. தூத்துக்குடி சிறுமிக்கு கிடைத்த மறுவாழ்வு!

பின்னர், வெகுநேரம் ஆகியும் இந்துமதி வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பாண்டியன் அவரை பல இடங்களில் தேடியுள்ளார். மேலும் நேற்று (செப். 11) காலை இந்துமதி காணாததை குறித்தும் நாயக்கனேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மீது சந்தேகம் உள்ளதாகவும் இந்துமதியின் கணவர் பாண்டியன் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்துமதியை தேடி வந்த நிலையில், கணவர் பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்து தன்னை தேடுவதை அறிந்து நேற்று (செப். 11) நள்ளிரவு உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்து இருந்த இந்துமதி தாமாகவே முன் வந்து ஆம்பூர் கிராம காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் காவல் துறையினரிடம், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி குறித்து பல பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும், இதனால் தனது கணவருடன் அடிக்கடி சண்டையிடுவதால் அதிக மனம் உளைச்சலில் இருந்து வந்தாகவும், அதனால் தர்மபுரி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்து இருந்ததாகவும் கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பின்னர், தனது கணவர் தன்னை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததை செய்திகளில் அறிந்து தானாகவே வந்ததாக தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் இந்துமதியை அவரது கணவர் பாண்டியனுடன் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:சிறுவன் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details