தமிழ்நாடு

tamil nadu

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வேண்டி வழக்கறிஞர்கள் காலவரையற்ற போராட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 2:00 PM IST

Lawyers Protest In Vaniyambadi: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் வேண்டி, காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

lawyers Protest In Vanniyambadi
வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வேண்டி வழக்கறிஞர்கள் காலவரையற்ற போராட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டித் தர வேண்டி வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் தொடர்பாக வழக்கறிஞர்கள் கூறுகையில், “அரசினர் தோட்ட வாளகத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த கட்டடம் கட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. மழைக்காலங்களில், இந்த நீதிமன்ற கட்டடத்தில் உள்ள அரசு ஆவணங்கள் சேதமடைகின்றது.

மேலும், வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற வளாகம் சி.எல் சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு, வாகனங்கள் நிறுத்துவதற்குகூட இடம் இல்லை. மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், வணிகவரி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, நீதிமன்ற நீதிபதிகளுக்கான குடியிருப்புகளும் அமைக்கப்படவில்லை. நீதிமன்றங்கள் ஆங்காங்கே அமைந்துள்ளதால், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால், வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டித்தர வேண்டி, வாணியம்பாடி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டித்தரக் கோரி, வாணியம்பாடி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் இன்று (ஜன.5) முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:நாக்கை துறுத்தியவாறு திமுக நிர்வாகியை கடிந்துகொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி!

ABOUT THE AUTHOR

...view details