தமிழ்நாடு

tamil nadu

மின்கம்பியை மிதித்த பசு உயிரிழப்பு

By

Published : Aug 29, 2020, 7:25 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே நிலத்தில் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசு மாடு உயிரிழந்தது.

Cow death due to electric shock in tirupattur
Cow death due to electric shock in tirupattur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சொந்தமாக மூன்றுக்கும் மேற்பட்ட பசுக்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், சரவணன் இன்று (ஆகஸ்ட் 29) காலை பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்ற போது கோவிந்தன் என்பவரின் நிலத்தின் வழியாக சென்றுள்ளார். அப்போது கோவிந்தனின் நிலத்தில் மின் அழுத்த கோபுரத்தில் இருந்து மின்கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்துள்ளது.

இதை கவனிக்காமல் சரவணன் பசுக்களை அழைத்துச்சென்ற போது எதிர்பாராத விதமாக பசு ஒன்று அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததும், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. உடனடியாக இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details