தமிழ்நாடு

tamil nadu

'விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கூட்டம்தான் ஆட்சியில்...!'

By

Published : Feb 11, 2022, 6:34 PM IST

நாடு முழுவதும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர்களுக்கு இடையே மதக் கலவரத்தை ஏற்படுத்துவதே பாஜகவின் மூலதனம் எனக் குற்றஞ்சாட்டிய முத்தரசன் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கூட்டம்தான் ஆட்சியில் இருப்பதாக விமர்சனம் செய்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன்
செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன்

திருப்பத்தூர்:தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நகர்ப்புற தேர்தலுக்காக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி 35ஆவது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கதிர் அரிவாள் சின்னத்தில் விஜி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியிடுகிறார்.

இதன் காரணமாக திருப்பத்தூருக்கு வருகைபுரிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் 5 மணியளவில் வேட்பாளர் விஜிக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில் முன்னதாக முத்தரசன் செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்த முத்தரசன், “திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மிகவும் திருப்தியளிக்கிறது. ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 171 வார்டுகளில் திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 35ஆவது வார்டில் ஒரு இடம் மட்டும் ஒதுக்கப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றிவருகிறது. வடகிழக்குப் பருவமழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசின் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு விரைந்து டெல்டா பாதிப்பை பார்வையிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்து நிதி வாங்கித் தருவதாக உறுதியளித்தனர்.

ஆனால், தமிழ்நாடு அரசு பாதிப்பின் காரணமாக சுமார் இரண்டாயிரத்து 600 கோடி ரூபாயைக் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் மத்திய அரசோ சொற்ப தொகையை மட்டும் கொடுத்துள்ளது. பின்னர் எந்த அலுவலகம் மீதும் யார் வன்மம் நடத்தினாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது, தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்திப் பேசுவது வன்முறை செய்வது கண்டிக்கத்தக்கது.

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து அண்ணாமலை என்ன விசாரணை கேட்கிறார் என்று தெரியவில்லை. யார் மீது தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் ஸ்டாலின், முத்தரசன், பாலகிருஷ்ணன்தான் செய்ய சொன்னார் என்று வெளிப்படையாகச் சொன்னாலும் ஆட்சேபனை இல்லை” என்றார்.

அதனைத் தொடர்ந்து பாஜக குறித்த கேள்விக்கு, “நாடு முழுவதும் மதக் கலவரத்தை ஏற்படுத்துவதை பாஜக மூலதனமாகக் கொண்டிருக்கிறது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் நான்காம் தர அரசியலைத்தான் பாஜகவின் கையிலிருக்கிற கொள்கை.

செய்தியாளரைச் சந்தித்த முத்தரசன்

ஆனால் தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை எப்போதும் அனுமதிக்க மாட்டோம், அதனை எதிர்கொள்வோம், இப்படிப்பட்ட கலவரம் வேண்டும் என்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கூட்டம்தான் ஆட்சியில் இருக்கிறது.

விடுதலைப் போராட்டத்திற்காகப் பாடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வ.உ. சிதம்பரனார், பாரதியார், வேலுநாச்சியார் பற்றி தெரியவில்லை. ஆனால், காந்தியடிகளைச் சுட்டுக்கொன்ற கோட்சேவை மட்டும் தெரிகிறது” என்றார்.

இதையும் படிங்க: காங்கிரசின் கொள்கை பிரிப்பதும் கொள்ளையடிப்பதுமே - நரேந்திர மோடி விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details