தமிழ்நாடு

tamil nadu

விதிமுறைகளை கடைபிடிக்காத ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரத்தை நீக்கி ஆட்சியர் உத்தரவு!

By

Published : Nov 15, 2022, 6:47 AM IST

ஆம்பூர் அருகே விதிமுறைகளை கடைபிடிக்காத ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை நீக்கி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விதி முறை கடபிடிக்காத ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரத்தை நீக்க ஆட்சியர் உத்தரவு
விதி முறை கடபிடிக்காத ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரத்தை நீக்க ஆட்சியர் உத்தரவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திவ்யா ஜானகிராமன். இவர் அரசு விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு அரசுக்கு 9 லட்சத்து 2002 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. .

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் சுயமாக செயல்படாமல் தலைவரின் கணவர் ஜானகிராமன் ஊராட்சியை நிர்வாகம் செய்துள்ளதாக மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிக்கை வந்துள்ளது.

விதி முறை கடபிடிக்காத ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரத்தை நீக்க ஆட்சியர் உத்தரவு

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவு 203 மற்றும் 204 படி அவசர கால அதிகாரத்தின் படி, வீராங்குப்பம் ஊராட்சியில் நிர்வாக பணிகளுக்காக ஊராட்சியின் வங்கி கணக்குகளை இயக்கவும், ஊராட்சி மன்ற தலைவருக்கான அதிகாரத்தை நீக்கினார்.

பின்னர், வீராங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவருக்கு பதிலாக ஊராட்சி காசோலைகளில் கையொப்பமிட மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுமதி வழங்கியும் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மருத்துவர் மீது கொலை முயற்சி புகார் - விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details