தமிழ்நாடு

tamil nadu

லாரி மீது கார் மோதி விபத்து: தனியார் வங்கி மேலாளர் உயிரிழப்பு!

By

Published : May 7, 2023, 6:36 PM IST

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்தார்.

Car accident
கார் விபத்து

ஆம்பூர்:சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர், நிலேஷ் பாபு. பெருங்குடியில் உள்ள தனியார் வங்கியில் மேலளாராகப் பணியாற்றி வந்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் நடைபெறும் வங்கி ஊழியர்களுக்கான முகாமில் கலந்துகொள்வதற்காக மனைவி அபூர்வாவுடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரை ஹரிஷ் என்பவர் ஓட்டிச்சென்றார்.

ஆம்பூர் அருகே மாதனூர் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. முன் இருக்கையில் இருந்த ஓட்டுநர் ஹரிஷ், வங்கி மேலாளர் நிலேஷ் பாபு ஆகியோர் படுகாயம் அடைந்து மயங்கினர். பின் இருக்கையில் அமர்ந்திருந்த அபூர்வா லேசான காயம் அடைந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள், மூவரையும் மீட்டனர். பின்னர் விபத்து குறித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதாக கூறப்படும் நிலையில், படுகாயம் அடைந்த நிலேஷ் பாபு விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். அதற்குள் சம்பவ இடத்துக்கு விரைந்த ஆம்பூர் கிராமிய போலீசார் ஓட்டுநர் ஹரிஷை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குன்னூர் - மே.பாளையம் ஒருவழிப்பாதை சிக்கல் - குன்னூர் மக்கள் மட்டும் இருவழியாக பயன்படுத்த அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details