தமிழ்நாடு

tamil nadu

விவசாய நிலத்தில் பிடிபட்ட10 அடி நீள மலைப்பாம்பு!

By

Published : Jan 23, 2022, 3:47 PM IST

வாணியம்பாடி அருகே கினிக்கிட்டி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.

10 அடி நீள மலைப்பாம்பு
10 அடி நீள மலைப்பாம்பு

திருப்பத்தூர் :கலந்திரா ஊராட்சி அடுத்த கினிக்கிட்டி வட்டம் பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ராஜு. இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு தனது விவசாய நிலத்தில் உள்ள கால்வாயை ராஜு சரிசெய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது, சுமார் 10 அடி நீளமுள்ள மலைபாம்பு கால்வாயில் இருந்துள்ளது. இதைபார்ந்து அதிர்ச்சியடைந்த ராஜூ உடனடியாக திருப்பத்தூர் வனச்சரகர் பிரபுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

10 அடி நீள மலைப்பாம்பு

இந்த தகவலையடுத்து திருப்பத்தூர் வன சரகர் பிரபுவின் உத்தரவின் பேரில் வனகாப்பாளர் அண்ணாமலை மற்றும் கிருஷ்ணன் சவுந்தர் , சதீஷ், சச்சின் ஆகியோர் மலைப்பாம்பை பிடித்து ஏலகிரி மலை காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.

இதையும் படிங்க : கரும்புத் தோட்டத்தை தீ வைத்து கொளுத்திய பாமக பிரமுகர்

ABOUT THE AUTHOR

...view details