தமிழ்நாடு

tamil nadu

மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபரின் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

By

Published : Sep 1, 2020, 10:30 PM IST

திருப்பத்தூர்: போலி ஆவணங்கள் மூலம் முன்னாள் வங்கி மேலாளர் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபரின் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்
மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபரின் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

வாணியம்பாடியை சேர்ந்த கலீல் ரகுமான், சிராஜுதீன் ஆகியோர் வாணியம்பாடியில் சாஃபா லெதர் மற்றும் ந்ஃபீசா ஓவர்சீஸ் என்ற நிறுவன பெயரில் போலி ஆவணங்கள் மூலம், 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியன் வங்கி கிண்டி கிளையில் மேலாளராக பணியாற்றிய டாமி ஜி. பூவாட்டில் என்பவருடன் இணைந்து 23.46 கோடி கடன் பெற்று அதைத் திருப்பி செலுத்தவில்லை என தெரியவந்தது.

இதனையடுத்து இந்தியன் வங்கி அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் கலீல் ரகுமான், சிராஜுதீன் மற்றும் மேலாளர் பூவாட்டில் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

மோசடி செய்து பெற்ற பணத்தை வைத்து, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்து சொத்துக்களை குவித்ததால் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இவர்கள் மோசடியில் சொத்துக்கள் வாங்கியது உறுதியானதால் தற்போது தொழிலதிபர் ரகுமானுக்கு சொந்தமான வாணியம்பாடி கோனமேடு தொழிற்பேட்டையிலுள்ள இடம், சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பு, வேலூரில் உள்ள காலியிடம் உள்ளிட்ட ஆறு அசையா சொத்துக்களை முடக்கியுள்ளனர்.

முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 20.65 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இது குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details