தமிழ்நாடு

tamil nadu

களைகட்டிய எட்டயபுரம் ஆட்டுச்சந்தை - ரூ 3 கோடிக்கு மேல் விற்பனை!

By

Published : Jul 9, 2022, 8:58 PM IST

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகி வியாபாரம் களை கட்டியுள்ளது.

களைகட்டிய எட்டயபுரம் ஆட்டுச்சந்தை - 3 கோடி ரூபாயை தொட்ட விற்பனை!
களைகட்டிய எட்டயபுரம் ஆட்டுச்சந்தை - 3 கோடி ரூபாயை தொட்ட விற்பனை!

தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை தென் மாவட்டத்தில் புகழ் பெற்ற சந்தையாக விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். முக்கியமாக தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், சந்தையில் தங்கள் ஆடுகளை விற்பதற்கும் வாங்கிச் செல்வதற்கும் இங்கு வருகிறன்றனர்.

களைகட்டிய எட்டயபுரம் ஆட்டுச்சந்தை - 3 கோடி ரூபாயை தொட்ட விற்பனை!

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, இன்று கூடிய ஆட்டுச்சந்தையில் விற்பனைக்காகவும் வாங்குவதற்காகவும் ஏராளமானோர் வந்தனர். இதில் 3,000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இதனால் 3 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகி, ஆட்டுச்சந்தை களை கட்டியுள்ளது. குறிப்பாக ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.1500 வரையிலும், ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.30,000 வரையிலும் விற்பனை ஆகியுள்ளது.

இதையும் படிங்க:ஆட்டின் விலை 70 லட்ச ரூபாய் - அப்படி என்ன விசேஷம்?

ABOUT THE AUTHOR

...view details