தமிழ்நாடு

tamil nadu

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை ரூ.2.04 கோடி!!

By

Published : Sep 13, 2022, 1:01 PM IST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.2.04 கோடி கிடைத்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை ரூ.2.04 கோடி!!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை ரூ.2.04 கோடி!!

தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

கோவில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்ட பின் முதல் முறையாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அறங்காவல் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை ரூ.2.04 கோடி!!

இந்த உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி உழவாரபணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ 2 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 806 காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் 2.25 கிலோ தங்கமும், 15.25 கிலோ வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

மேலும் 426 வெளிநாட்டு தாள்களும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.6 லட்சம் மோசடி - பாதிக்கப்பட்ட பெண் புகார்

ABOUT THE AUTHOR

...view details