தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லை.. மனு அளிக்க வருவோரின் துயரம் தீருமா?

By

Published : Jul 10, 2023, 7:32 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் மனு அளிக்க வந்துச் செல்லும் நிலையில் அங்கு குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

பொதுமக்களின் கோரிக்கை

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திலும், பிற நாள்களிலும் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் உத்தரவு, தொழில் கடன், முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்த பெண்ணுக்கான உதவித்தொகை என பல மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

குறைகளை மனுவாக எழுதி தர இலவச ஏற்பாடு: இந்த நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மரத்தடிகளில் அமர்ந்து மனுக்களை எழுதிக்கொடுத்து வந்தவர்களை கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆட்சியர் செந்தில்ராஜ் "மனு எழுதிக் கொடுக்க இனிமேல் யாரிடமும் பணம் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். வாகனங்கள் நிறுத்துமிடம் அருகில் மனு எழுதுவற்கு இடம் ஒதுக்கித் தருவதாகவும், உங்களுக்கு ஊதியமாக குறிப்பிட்டத் தொகையை, ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து வழங்குவாகவும்" கூறியுள்ளார். மேலும், இதைக் கண்காணிக்க இரண்டு வருவாய் ஊழியர்களையும், பாதுகாப்புக்கு ஒரு காவலரையும் நியமித்து இருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, ஆட்சியர் கி. செந்தில்ராஜ் ஐஏஎஸ் கூறியது போன்றே, ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரேயிருக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 12 மேஜைகள், நாற்காலிகள் போடப்பட்டு மனு எழுதுவதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இலவசமாக மனு எழுதுமிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு மனு எழுத வரும் பொதுமக்கள் வரிசையில் நின்று மனுக்களை எழுதி வாங்கி ஆட்சியர், அதிகாரிகளிடம் கொடுத்து வருகின்றனர்.

ஆட்சியரை பார்க்கவிடாமல் தடுக்கும் போலீசார்?: இதற்கிடையே, மனு அளித்து வரும் பொதுமக்களுக்கு, மனு எழுதுமிடத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லை. குழந்தைகளை அழைத்து வரும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கிராம பிரச்னையை கருத்தில் கொண்டு அக்கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர். ஆனால், போலீசார் ஆட்சியரை பார்க்க 5 பேரை மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். மீதம் உள்ளவர்கள் வெளியே நிற்கின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்துக: ஆகவே, மனு அளிக்க வரும் கணவன் மனைவி உள்ளிட்டோர்களை மாவட்ட ஆட்சியர்களை சந்திக அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு மனு அளிக்க வருவோருக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் அமரும் இடம் ஆகியவை இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீருக்கு மட்டும் ரூ.100 செலவிடும் பொதுமக்கள்: இது குறித்து பொதுமக்களாகிய பூமயில் என்பவர் நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், 'தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் மனு அளிக்க வருகை தந்து கொண்டிருக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் இந்த மனு எழுதுபவர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறார். ஆனால், இங்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு குடிநீர் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். குடிநீருக்கு மட்டுமே சராசரி ஒரு நபர் 100 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய இச்சுழலில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

நடவடிக்கை தேவை:மேலும், கழிப்பறை வசதியும் செய்து கொடுக்க வேண்டும். அதேபோல மனு கொடுக்க கணவன், மனைவி சேர்ந்து வருகின்ற நிலையில், கணவனை மட்டுமே அனுமதிப்பது மனைவியை வெளியே நிற்க செய்வது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபடுகின்றனர். ஆகவே, அதிகாரிகள் அதனை தவிர்த்து இரண்டு பேரையும் அனுமதி அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: Theni - 20 நாட்களுக்கும் மேல் மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் மலைக்கிராம மக்கள் - அரசு நடவடிக்கை எடுக்குமா?

ABOUT THE AUTHOR

...view details