தமிழ்நாடு

tamil nadu

"நேர்மையான விஏஓ லூர்து பிரான்சிஸை கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும்" - கலெக்டர்

By

Published : Apr 25, 2023, 6:51 PM IST

Updated : Apr 25, 2023, 9:03 PM IST

தூத்துக்குடி அருகே கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ், ரொம்ப நேர்மையான தைரியமான அலுவலராக சிறப்பாக பணியாற்றியவர் என்றும்; அவரை படுகொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

"நேர்மையான விஏஓ லூர்து பிரான்சிஸை கொன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும்" - கலெக்டர்

நெல்லை: தூத்துக்குடி அருகே மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட கோவில்பத்து ஊராட்சி விஏஓ லூர்து பிரான்சிஸ், மிகவும் தைரியமான அலுவலர் என்றும்; நேர்மையான அலுவலர் என்றும்; அவரை இவ்வாறு கொலை செய்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நெல்லையில் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் என்பவரை இன்று (ஏப்.25) மர்ம நபர்கள் அவரது அலுவலகத்தில் வைத்தே சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை, அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்தனர். இதைத்தொடர்ந்து, இதுகுறித்து தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், லூர்து பிரான்சிஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவில்பத்து கிராமத்தில் பணிபுரிந்து வந்தார் எனவும், அவர் மிகவும் நேர்மையான அலுவலர் என்றும் தெரிவித்தார். குறிப்பாக, அரசு நிலங்கள் ஏதேனும் ஆக்கிரமிக்கப்பட்டால் அந்த அரசு நிலங்களை மீட்பதில் அவர் அதிக கவனம் செலுத்துவார் என்றும்; ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்கும் போது கூட, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை அறிந்து நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் கூறினார். அப்போதும் அவரை சிலர் தாக்கியதாகவும்; பின்னர், தாக்கியவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் விவரித்தார்.

மேலும், அவர் மிகவும் தைரியமான நேர்மையான அலுவலர் என்றும்; உயிரிழந்த லூர்து பிரான்சிஸை எங்கு பணி அமர்த்தினாலும் வேலை செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்றும் பெருமையோடு தெரிவித்தார். இந்நிலையில், அவரை வெட்டிய மர்ம நபர்கள் இதுவரை யார்? என்று தெரியவில்லை என்றும்; இதுகுறித்து ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

இதையும் படிங்க:VAO Murder: விஏஓ ஓடஓட வெட்டி படுகொலை; குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு

Last Updated :Apr 25, 2023, 9:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details