தமிழ்நாடு

tamil nadu

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்!

By

Published : Jan 5, 2023, 5:28 PM IST

கொலை முயற்சி வழக்கில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கொலை முயற்சி வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்
கொலை முயற்சி வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்!

தூத்துக்குடி: திருச்செந்தூரில் கடந்த 2011ஆம் ஆண்டு திமுகவினர் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்த நிலையில், அப்போது திமுக எம்எல்ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த ஆறுமுகநேரி நகர, திமுக செயலாளர் சுரேஷ் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதில் கடந்த 2011 மார்ச் மற்றும் மே மாதங்களில் திமுக நகரச்செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறித் தாக்குதல், பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. இந்தக் கொலை முயற்சி வழக்கு சம்பந்தமாக மூன்று பிரிவுகளில் அமைச்சர் அனிதா கிருஷ்ணன் உட்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த வழக்கு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார். அப்போது மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி இந்த வழக்கை வருகிற 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பள்ளி பராமரிப்பு பணியில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..

ABOUT THE AUTHOR

...view details