தமிழ்நாடு

tamil nadu

சிவகளையில் மேலும் 2 முதுமக்கள் தாழிகள் - தோண்ட தோண்ட கிடைக்கும் அரியப் பொருள்கள்!

By

Published : Jun 15, 2020, 9:08 PM IST

தூத்துக்குடி: சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வில், மேலும் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

sivakalai
sivakalai

தூத்துக்குடி மாவட்டம், சிவகளை கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தொல்லியல் களத்தில், பழங்கால பாறைக் கிண்ணங்கள், இடைக்கற்கால கருவிகள், கல்வட்டங்கள், இரும்புக் கருவிகளின் கழிவுகள், முதுமக்கள் தாழிகள், கறுப்பு - சிவப்பு மண்பாண்ட வகைகள், எடைக் கற்கள், செம்பினால் ஆன பொருள்கள் கிடைத்துள்ளன.

இதனைத்தொடர்ந்து சிவகளைப் பகுதியில் தொல்லியல் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். அதனடிப்படையில், சிவகளையில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆய்வில், 'கடந்த 5ஆம் தேதி 2000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜூன் 15) மேலும் 2 முதுமக்கள் தாழிகளும், சிதிலமடைந்த 5 முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை தொல்லியல் துறையினர் எவ்வித சேதமும் இன்றி வெளியில் எடுத்திடும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். மேலும், முதுமக்கள் தாழியில் இறந்தவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கும் என்பதால், மிகவும் நுட்பமாக எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீவிரமாக நடைபெறும் அகழாய்வுப் பணி

இதையும் படிங்க:'5 மாசம் ஆச்சு; ஆனா கரோனா பிரச்னை முதலமைச்சருக்கு புரியல' - உதயநிதி காட்டம்

ABOUT THE AUTHOR

...view details