தமிழ்நாடு

tamil nadu

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர் கைது!

By

Published : Dec 18, 2019, 7:52 AM IST

தூத்துக்குடி: முடிவைத்தானேந்தல் பகுதியில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய குற்றத்தில் திமுக கலை இலக்கிய அணி துணை அமைப்பாளரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

Tuticorin
திமுக பிரமுகர் கைது

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜ் (50), டி.வி.மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். மேலும், தூத்துக்குடி மாவட்ட திமுக கலை இலக்கிய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவர், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்தும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றியும் பலமுறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும், அச்சிறுமி தான் கர்ப்பம் அடைந்திருப்பது தெரியாமல், தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பம் தரித்திருக்கும் தகவலை பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குழந்தையின் எதிர்காலம் இப்படி சீரழிந்துவிட்டதே என நினைத்து கதறி அழுதனர்.

மேலும், சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்த சிறுமிக்கு கர்ப்பம் கலைவதற்கான மருந்தை பெற்றோர் கொடுத்துள்ளனர். இதனால், ஆறு மாதமான குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. பின்னர் யாருக்கும் தெரியாமல் இறந்த குழந்தையை வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய திமுக பிரமுகர் கைது!

இத்தகவலறிந்து சிறுமியின் வீட்டிற்கு விரைந்த தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் துறை, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமியை திமுக பிரமுகர் பாலியல் வண்புணர்வு செய்து கர்ப்பமாக்கியது மட்டுமல்லாமல் வெளியே யாரிடமும் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் எனக் கூறி மிரட்டியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, திமுக பிரமுகர் ராஜை புதுக்கோட்டை காவல்துறை "போக்சோ" சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையும் படிங்க: மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details