தமிழ்நாடு

tamil nadu

இடுகாட்டை சூழ்ந்த மழைநீர் - பொதுமக்கள் அவதி

By

Published : Dec 1, 2021, 10:05 PM IST

தூத்துக்குடியில் இடுகாட்டை சூழ்ந்த மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

இடுகாட்டை சூழ்ந்த மழைநீர்
இடுகாட்டை சூழ்ந்த மழைநீர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை மக்களை மட்டும் வாட்டி வதைக்கவில்லை. மண்ணிலிருந்து மாண்டு போனவர்களையும் விட்டுவைக்காமல் துரத்தியடிக்கிறது.

தூத்துக்குடி 3-ம் மைலில் உள்ள இடுகாட்டில் தேங்கி நிற்கும் மழைநீரால் அங்குள்ள கல்லறைகள் அனைத்தும் மூழ்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் இறந்து போனவர்களை புதைப்பதற்காக அங்கு வருகிறவர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ஈமச் சடங்குகளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இடுகாட்டை சூழ்ந்த மழைநீர்

எனவே, இடுகாட்டில் இருக்கும் வெள்ள நீரை உடனடியாக மாவட்ட நிர்வாகம் வெளியேற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:Nannilam Flood: வாஞ்சியாற்று உடைப்பால் பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details