தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடியில் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த காவலர்.. போலீசார் விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 11:47 AM IST

Thoothukudi police death: தூத்துக்குடியில் காவலர் ஒருவர் வீட்டில் மர்மமான குறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த காவலர்
தூத்துக்குடியில் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த காவலர்

தூத்துக்குடி: வடபாகம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர், பாலமுருகன். இவர் திரேஸ்புரம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். பாலமுருகன் மது பழக்கத்திற்கு அடிமையாகி, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகள், இவரைப் பிரிந்து அவரது தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில், பாலமுருகன் தனிமையில் இருந்துள்ளார். பின்னர், காவலர் பாலமுருகன் கடந்த சில நாட்களாக பணிக்குச் செல்லாமல் வீட்டில் அதிக அளவு மது போதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முதல் பூட்டி இருந்த வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து, வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வடபாகம் காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, காவலர் பால முருகன் சடலமாக கிடந்துள்ளார்.

பின்னர் காவலர் பாலமுருகனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவலர் பாலமுருகன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததில் இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சினிமா பாணியில் நடந்த சேசிங்.. கஞ்சா கடத்தல்காரர்களை விரட்டிப் பிடித்த காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details