தமிழ்நாடு

tamil nadu

திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

By

Published : Jan 13, 2023, 4:13 PM IST

தைத்திருநாளை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக குவிந்து வருவதால், திருச்செந்தூர் நகரம் திருவிழாக் கோலமாக காட்சியளித்தது.

திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு
திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு

திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தூத்துக்குடி:தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலுக்கு தமிழர் திருநாளான தைத்திருநாளை முன்னிட்டு தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து 30-நாட்கள் விரதமிருந்து அலகு குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக பக்திப் பாடல்களை பாடியும் , அரோகரா பக்தி கோஷம் முழங்கவும் பாதயாத்திரையாக வருகின்றனர்.

மேலும் சில பக்தர்கள் சுமார் 22 அடி நீளம் வரையிலான அலகு வேல்களை குத்தி பாதயாத்திரையாக வந்து வேண்டுதல்களை நிறைவேற்றியது காண்பவர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து அதிகாலை 3 மணி முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:பொங்கல் விழாவில் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details