தமிழ்நாடு

tamil nadu

முத்தாரம்மன் கோயில் வெப்சைட்டில் 'சர்ச்' என மாற்றப்பட்டது புரளியா? - போலீஸ் விசாரணை

By

Published : Oct 29, 2020, 9:37 AM IST

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் இணையதளம் ஹேக் செய்து 'சர்ச்' என்று மாற்றப்பட்டுள்ளதாக வீண் புரளி கிளப்புகின்றனர் என கோயில் நிர்வாகி ரத்தின வேல்பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குலசேகரன்பட்டினம்
குலசேகரன்பட்டினம்

கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டு கரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால் பக்தர்கள் பங்கேற்பின்றி கடந்த செவ்வாய்கிழமை மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. மேலும், முத்தாரம்மன் கோயில் வரலாற்றையும், கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்யவும், "குலசேகரன்பட்டினம் டெம்பிள்" என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில், குலசேகரன்பட்டினம் கோயில் இணையதளத்தில் சமூகவிரோதிகள் சிலர் ஊடுருவி அதை சர்ச் என்று மாற்றியுள்ளதாக, கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாயின. இந்தக் கோயிலில் மாற்று மதத்தினர் நிர்வாக பொறுப்பில் இருப்பதாகவும் இணையதளத்தில் தகவல் பரவியது.

இது குறித்து கோயில் நிர்வாக அலுவலரிடம், உதவி ஆணையருமான ரத்தின வேல்பாண்டியன் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதில், "குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் இணையதளம், குலசேகரன்பட்டினம் டெம்பிள் என்ற பெயரிலேயே உள்ளது. ஆனால் சிலர் இதை ஹேக் செய்து சர்ச் என்று மாற்றப்பட்டுள்ளதாக வீண் புரளியை கிளப்புகின்றனர். கோயில் நிர்வாகத்தின் நன்மதிப்பை சீர்குலைத்து கெட்ட பெயர் உருவாக்கும் விதமாகவும், மத உணர்வுகளை புண்படுத்தி சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாகவும் அவதூறு பரப்புகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இது குறித்து உதவி ஆய்வாளர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்தார். ஆய்வாளர் ராதிகா மற்றும் சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பக்தர்கள் இன்றி நடைபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சூரசம்ஹாரம்!

ABOUT THE AUTHOR

...view details