தமிழ்நாடு

tamil nadu

எதிர்க்கட்சிகள் உருப்படியான ஆலோசனைகளை வழங்கவில்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ

By

Published : May 31, 2020, 4:43 PM IST

தூத்துக்குடி: கரோனா காலத்திலும் அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள், இதுவரை உருப்படியான ஆலோசனைகள் எதுவும் வழங்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றஞ்சாட்டினார்.

kadampur raju
kadampur raju

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தெஷ்ணமாற நாடார் சங்கம் சார்பில் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.

உதவிப் பொருள்களை வழங்கிய கடம்பூர் ராஜூ

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனடிப்படையில்தான் வேதா இல்லத்ததை நினைவிடமாக அரசு மாற்றியது. தீபா, தீபக் இருவரையும் நீதிமன்றம் வாரிசாகதான் அறிவித்துள்ளது. ஆனால், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கவில்லை.

உதவிப்பொருள்களை வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ

இதுதொடர்பான நீதிமன்ற விசாரணைகள் முடிந்த பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் தீர்க்கமான முடிவெடுப்பார். கரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்திலிருந்து எதிர்க்கட்சி உருப்படியான ஆலோசனை எதுவும் அரசுக்கு வழங்கவில்லை. குற்றம், குறை கண்டுபிடிப்பதையே எதிர்க்கட்சித் தலைவர் இலக்கணமாக கடைப்பிடித்து வருகிறார். கரோனா காலத்திலும் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி தமிழ்நாட்டில்தான் உள்ளது என்பது வேதனைக்குரியது" என்றார்.

இதையும் படிங்க:திமுகவின் தலைவராக பிரசாந்த் கிஷோரை மாற்றி விடலாம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details