தமிழ்நாடு

tamil nadu

கோவில்பட்டி சிபிஐஎம் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

By

Published : Mar 18, 2021, 4:40 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், கனிமொழி எம்பி முன்னிலையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்செய்தார்.

கோவில்பட்டி சிபிஐஎம் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்!
கோவில்பட்டி சிபிஐஎம் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே. சீனிவாசன், கனிமொழி எம்பியுடன் பழைய பேருந்து நிலையம் முன்பு ஊர்வலமாகச் சென்றார்.

கோவில்பட்டி சிபிஐஎம் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

பின்னர், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் தனது வேட்புமனுவினைத் தாக்கல்செய்தார் கே. சீனிவாசன். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, கூட்டணி கட்சித் தலைவர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...ELECTION BREAKING: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு

ABOUT THE AUTHOR

...view details