தமிழ்நாடு

tamil nadu

thoothukudi police suicide: காவலர் குடியிருப்பில் தலைமைக் காவலர் தற்கொலை.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

By

Published : Aug 14, 2023, 10:50 AM IST

Thoothukudi Police Suicide: புளியம்பட்டி காவல் நிலைய தலைமை காவலர் கொடிவேல் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி
Thoothukudi

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மகன் கொடிவேல் (40). இவர் புளியம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். அங்குள்ள காவலர் குடியிருப்பில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று இரவு 8 மணி அளவில் கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கொடிவேல் வீட்டில் படுக்கை அறையில் தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கொடிவேல் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி கதறி அழுதார்.

இதையும் படிங்க:மூதாட்டியை மிரட்டி 100 சவரன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு... உறவினரே கைவரிசை காட்டியதாக புகார்!

சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற புளியம்பட்டி காவல் நிலைய போலீசார், கொடிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொடிவேல் குடும்ப பிரச்னை காரணமாக கொடிவேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், காவலர் குடியிருப்பில் தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கடம்பூர் மலைப்பகுதியில் ஆண் யானை உயிரிழந்த சம்பவம்; இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்..!

ABOUT THE AUTHOR

...view details