தமிழ்நாடு

tamil nadu

மிக்ஜாம் புயல் எதிரொலி; தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 10:18 AM IST

Thoothukudi Fishing allow: மிக்ஜாம் புயல் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் இன்று (டிச.5) கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

தூத்துக்குடி: வங்கக் கடலில் நிலவி வரும் 'மிக்ஜாம்' புயல் நேற்று சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 90 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக நிலவி வந்தது. இந்த புயல் இன்று தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே பாபட்லா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயல் காரணமாக வட தமிழ்நாடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில், கடலில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள 245 விசைப் படகுகளும், நேற்று துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதே போன்று, பெரும்பாலான நாட்டுப் படகுகளும் கடலுக்குச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக மீன்கள் வரத்து குறைந்துள்ளது. அதே நேரத்தில் மீன்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக இன்று (நவ.5) தொடர்ந்து பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இன்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் புதுமண தம்பதி கொலை வழக்கு: 5 பேர் மீது பாய்ந்த குண்டர் தடுப்பு சட்டம்

ABOUT THE AUTHOR

...view details