தமிழ்நாடு

tamil nadu

"மணிப்பூர் கலவரத்தை அடக்கிவிட்டு பின்னர் தமிழகத்தை பற்றி பேசுங்க" - பாஜகவை விளாசிய திமுக எம்.பி ஆ.ராசா!

By

Published : Jul 14, 2023, 5:26 PM IST

மணிப்பூர் கலவரத்தை முதலில் அடக்கிவிட்டு பின்னர் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து பாஜகவினர் பேச வேண்டும் என திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கருத்து தெரிவித்துள்ளார்.

thoothukudi
தூத்துக்குடி

மேடையில் எம்.பி., ஆ.ராசா ஆவேசமாக பேசிய வீடியோ

தூத்துக்குடி: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மேயர் ஜெகன் முன்னிலையில், திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழா மேடையில் எம்.பி ஆ.ராசா பேசியதாவது, "எல்ஐசியில் மக்கள் போடும் பணத்தை பல லட்சம் கோடி அதானியிடம் முதலீடு செய்தார் மோடி. அதே போல் ஓஎன்ஜிசி, பெட்ரோலிய நிறுவனங்கள் பல லட்சம் கோடி பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்கின்றனர். இதற்கு மோடி அவர்களை அரசு விமானத்தில் பல வெளிநாடுகளுக்கு கூட்டி சென்று அந்நாட்டில் பேசி ஒப்பந்தம் கையெழுத்தாகி அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக அதானிக்கு கார்ப்பரேட் மதிப்பு கூடுகிறது. இதற்கு பிறகு உலக அளவில் முதல் பணக்காராக மோடியால் அதானி வருகிறார் என கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசிய ஆ.ராசா, மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரனாக மாறுகிறார். அவர் என்ன செய்தார் என்று ஹிண்டன்பர்க் என்ற உளவுத்துறை நிறுவனம் வெளியே கொண்டு வந்தது. அதானி பங்குகளை அதிகமாக காட்டி, ஒரு பெரிய பிம்பத்தை இந்தியாவில் உருவாக்கினார். மேலும், கணக்குகளில் மோசடி செய்துள்ளார் என்று வெளிநாட்டில் உள்ள நிறுவனம் செல்கிறது. அந்த நிறுவனத்தின் மீது வழக்கு போட திரானி இல்லை. இது குறித்து மோடியிடம் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை என்று விமர்சித்தார்.

மேலும், பெங்களூரில் ஒரு நபர் ட்விட்டரில் பதிவு செய்தார் என்று அவரை ஜெயிலில் போட்ட நீங்கள், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். என் மீது ஒரு லட்சத்து எழுபத்தி 6,000 கோடி குற்றச்சாட்டு வந்தது. நான் ஓடி ஒழியவில்லை. 15 நாள் சிபிஐ அலுவலகத்தில் வைத்து 16-வது நாள் நீதிமன்றத்திற்கு கூட்டிச் சென்றனர். அப்போது நீதிபதியுடம் நான் கூறியது ஒரே ஒரு டாலரை வெளிநாட்டில் நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் வாழ்க்கை முழுவதும் சிறையில் இருக்கின்றேன் என்றேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு நானே வாதாடி சாட்சி சொல்லி உடைத்து வெளியே வந்தேன். அதனால் எனக்கு மோடியை கேட்க தகுதி இருக்கின்றது என்றார்.

அதோடு, நீங்கள் ஆளும் மணிப்பூரில் என்ன நிலைமை, அங்கு முதலமைச்சர் வெளியே வர முடியவில்லை.ஆளுநர் வெளியே வர முடியவில்லை. அதைவிட கொடுமை அங்கு உள்ள மத்திய அமைச்சர் வீடு தரைமட்டமாக்கப்படுகிறது. காவல்துறையின் 150 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு போய் விட்டனர். அதைப் பற்றி இதுவரை பிரதமர் மோடி வாயை திறக்கவில்லை. திமுக ஆட்சியை கலைப்பதாக இருந்தால் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவதாக இருந்தால் முதலில் மணிப்பூரில் அதை செய்து விட்டு அதன் பின் இங்கு வரவும் என்று ஆவேசமாக பேசினார்.

இதையும் படிங்க:Kalakshetra: கலாக்ஷேத்ரா பாலியல் விவகாரம்: ஓரிரு நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details