தமிழ்நாடு

tamil nadu

காங்கிரஸ் நிர்வாகி உருட்டுகட்டையால் அடித்து கொலை... சொத்துத் தகராறில் தாய், தம்பி வெறிச்செயல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 8:25 AM IST

Tuticorin Congress administer murder : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே காங்கிரஸ் நிர்வாகியை சொத்து தகராறில் அவரது தாயாரும், சகோதரரும் உருட்டு கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யபட்ட  காங்கிரஸ் பிரமுகர் செல்வம்
கொலை செய்யபட்ட காங்கிரஸ் பிரமுகர் செல்வம்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி புதுமனை தெருவை சேர்ந்தவர் வேம்புகுரு. இவரது மகன் மாரி செல்வம் (வயது 30). இவர் காங்கிரஸ் கட்சியில் கருங்குளம் வட்டார செயலாளராக இருந்தார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டதாக கூறப்டுகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி மாரிசெல்வத்திற்கும் அவரது தம்பி மணிகண்டனுக்கும் சொத்து குறித்து தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் மணிகண்டனுக்கு உதவியாக தாயார் லட்சுமியும் இணைந்ததாக கூறப்படுகிறது. இதில், லட்சுமியும், மணிகண்டனும் இணைந்து உருட்டுக் கட்டையால் மாரிசெல்வத்தினை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மயங்கி விழுந்த மாரிசெல்வத்தினை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயார் லெட்சுமி, மற்றும் தம்பி மணிகண்டன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பை சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் பொன்முடி

இதற்கிடையில் மாரிசெல்வத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் கொலை வழக்குப் பதிவு செய்து லட்சுமி, மணிகண்டன் ஆகிய இருவரிடம் தீர விசாரணை நடத்தி வருகின்றார்.

இதையும் படிங்க:உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும் - சனாதனம் குறித்த பேச்சுக்கு இயக்குநர் வெற்றிமாறன் ஆதரவு!

ABOUT THE AUTHOR

...view details