தமிழ்நாடு

tamil nadu

ஆளுங்கட்சியின் பயம்தான் காரணம் - அமமுக தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா!

By

Published : Jan 4, 2020, 5:41 PM IST

தூத்துக்குடி: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு ஆளுங்கட்சியின் பயம்தான் காரணம் என அமமுக தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா தெரிவித்தார்.

local
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அமமுகவின் ஒன்றிய கவுன்சிலர்கள்களுடன் அக்கட்சியின் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," ஒரு ஜனநாயகத்தில் மக்களுக்கு சேவை செய்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதற்கு கயத்தாறு ஒன்றியம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கயத்தாறு ஒன்றியத்தில் அனைத்து சமுதாய மக்களுக்கும் வேறுபாடின்றி எங்களை ஆதரித்ததால் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

அமமுக தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தாமதமாவதற்கு ஆளுங்கட்சி பயம்தான் காரணம். மாற்றுக் கட்சிகள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது, ஏதாவது முறையீடு செய்து விடலாமா என்று பார்க்கிறார்கள், ஆனால் அதிகாரிகள் நன்றாக இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திலும் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்க ஆளுங்கட்சியினர் முயற்சி செய்தனர்” என்றார்.

இதையும் படிங்க: விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்றே தேர்வு - மாணவர்கள் அதிர்ச்சி!

Intro:தேர்தல் முடிவு அறிவிப்பதில் தாமதம் - ஆளுங்கட்சியின் பயந்தான் காரணம் - அமமுக தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா பேட்டி


Body:தேர்தல் முடிவு அறிவிப்பதில் தாமதம் - ஆளுங்கட்சியின் பயந்தான் காரணம் - அமமுக தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய கவுன்சிலர்கள்களுடன் அக்கட்சியின் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் எங்களுக்கு அமோக வெற்றியை மக்கள் என்ற தந்திருக்கின்றார்கள். ஒரு ஜனநாயகத்தில் மக்களுக்கு சேவை செய்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதற்கு கயத்தாறு ஒன்றியம் ஒரு எடுத்துக்காட்டு. 20 ஆண்டு காலமாக நான் ஒன்றிய பெருந்தலைவராக செயலாற்றி இருக்கின்றேன்.எல்லா நிலையிலும் சிறப்புக்குரிய ஒன்றியமாக விருது வாங்கியிருக்கும். அங்கு இருக்கின்ற கிராமங்களில் அத்தனை இறைவன் சாலை வசதியோ குடிநீர் வசதியோ அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்த காரணத்தினால் இந்த அமோகமான வெற்றி கொடுத்திருக்கிறார்கள் .கயத்தாறு ஒன்றிய அனைத்து சமுதாய மக்களுக்கும் வேறுபாடின்றி எங்களை ஆதரித்தால் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்

என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது பொய்யான வழக்கு, நான் சொல்லவந்த கருத்தை விட்டுவிட்டு கிராபிக்ஸ் செய்து போட்டுள்ளனர். அதை நான் சட்டப்படி சந்திப்பேன். தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தாமதமாவதற்கு காரணம் பயம் தான். மாற்றுக் கட்சிகள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது, ஏதாவது முறையீடு செய்து விடலாமா என்று பார்க்கிறார்கள், ஆனால் அதிகாரிகள் நன்றாக இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை, கயத்தார் ஊராட்சி ஒன்றியத்திலும் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்க ஆளும் கட்சியினர் முயற்சி செய்தனர். ஆனால் முடியாத நிலை, மாவட்ட ஆட்சியர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேர்மையாக நடந்து கொண்டனர். தமிழகத்தில் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகள் கயத்தார் பகுதியை அறிவித்திருந்தனர் ஆனால் எவ்வித அசம்பாவிதம் நடக்காமல் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் இது ஒரு அமோக வெற்றி. மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு முழுமையாக அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து சேவை செய்வோம் என்றார்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details