தமிழ்நாடு

tamil nadu

பாலியல் வழக்கில் மேலும் ஒரு பாதிரியார் கைது.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

By

Published : Jun 19, 2023, 9:48 PM IST

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரில் பாதிரியார் வினோத் ஜோஸ்வா போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Priest arrested under pocso act
பாலியல் வழக்கில் பாதிரியார் கைது

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தில், ஆசீர்வாத சகோதர சபை என்ற பெயரில் பெந்தேகோஸ்து தேவாலயம் ஒன்று உள்ளது. அதில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் ஜோஸ்வா (40), என்பவர் பாதிரியாராக இருந்து வந்துள்ளார்.

மேலும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. அதோடு அச்சிறுமியைப் பலமுறை கட்டாயப்படுத்தி அச்சிறுமியுடன் உடலுறவிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது வெளியே தெரிவித்தால் சிறுமியைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி பாதிரியார் அளித்த தொந்தரவைப் பற்றி வெளியே தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பாதிரியார் வினோத் ஜோஸ்வாவின் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் கடந்த வருடம் திருமணம் ஆகியுள்ளது. தற்போது அப்பெண் கர்பணியாக இருக்கிறார். ஆனால் அவரது செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் பாதிரியார் வினோத் ஜோஸ்வா தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், மணியாச்சி டி.எஸ்.பி லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா மற்றும் போலீசார் பாதிரியார் வினோத் ஜோஸ்வாவை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு வைத்து கைது செய்து கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே காவல்துறையினர் விசாரணையில் பாதிரியார் வினோத் ஜோஸ்வா கர்ப்பிணிப் பெண்ணுக்கு 15 வயதிலிருந்தே பாலியல் தொல்லை அளித்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாதிரியார் வினோத் ஜோஸ்வா கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையை சார்ந்த பாதிரியார் பெனிடிக் ஆண்டோ என்பவர் பல பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டது, பாவ மன்னிப்பு கேட்க வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது, பெண்களிடம் செல்போனில் பேசியது, பெண்களுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியது உள்ளிட்டவை அம்பலமாகி பாதிரியார் பெனிடிக் ஆண்டோ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது. மேலும் ஒரு பாதிரியாரின் பெண்ணுக்கு அளித்த பாலியல் தொல்லைகள் அம்பலமாகி, கடம்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:போக்கிரி பட பாணியில் அத்துமீறல்.. இன்ஸ்பெக்டர் மீது திருச்சி கலெக்டரிடம் இளம்பெண் புகார்

ABOUT THE AUTHOR

...view details