தமிழ்நாடு

tamil nadu

கருகும் நிலையில் சம்பா பயிர்கள்: பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க கோரிக்கை!

By

Published : Nov 15, 2019, 8:51 PM IST

திருவாரூர்: பாசனக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடாததால் பின்னவாசல் கிராமத்தில் 147 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தற்போது கருகும் நிலைக்குச் சென்றுள்ளது.

Samba crops

இந்த ஆண்டு பெய்த பருவமழையை நம்பி டெல்டா பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் சம்பா பயிர் நடவு செய்துள்ளனர். தற்போது சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பின்னவாசல் கிராமத்தில் சம்பா பயிர்களுக்கு பாசனநீர் இல்லாமால் நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவாசாயிகள் கூறுகையில், வருடந்தோறும் இந்தப்பகுதியின் முக்கிய பாசன ஆறாக உள்ள வெள்ளையாறு மூலம் கிடைக்கும் நீரை வைத்து சாகுபடி செய்து வந்தோம். ஆனால் இந்த ஆண்டு அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் பாசன வாய்க்கால்களில் நீர் திறக்கப்படவில்லை.

கருகும் நிலையிலுள்ள சம்பா பயிர்கள்

இதனால், ஆற்று நீரானது விவசாயிகளுக்கு உபயோகம் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்களைச் சந்தித்து, பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை வைத்தோம்.

பொதுப்பணித்துறையினர் எங்களது கோரிக்கையை கண்டுகொள்ளாததால் தற்போது 147 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் கருகும் நிலைக்குச் சென்றுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இப்பகுதியிலுள்ள பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பதற்கான வழி வகைகளைச் செய்து கருகும் நிலையிலுள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மாணவி தற்கொலை தொடர்பாக வதந்திகளைப் பரப்பாதீர்' - சென்னை ஐஐடி

Intro:


Body:திருவாரூர் அருகே ஆற்றில் தண்ணீர் இருந்தும் அதிகாரிகள் அலட்சியத்தால் 140 ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் அபாயம், உடனடியாக பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து கருகும் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.

டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருவாரூர் அருகே பின்னவாசல் கிராமத்தில் 140 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் தற்போது தண்ணீரின்றி நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,
இந்தப் பருவத்தில் மேட்டூர் அணை நான்குமுறை நிரம்பியது, அடிக்கடி மழை பெய்து வந்ததை நம்பி நடவு மற்றும் நேரடி விதைப்பின் மூலம் சம்பா சாகுபடியில் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டோம். ஆனால் இந்த பகுதியில் முக்கிய பாசன ஆறு வெள்ளையாறு இதன் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு ஆண்டுதோறும் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகிறோம், ஆனால் இந்த ஆண்டு சம்பா பருவத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் பாசன வாய்க்கால்களில் திறக்கப்படாததால் நேரடியாக கடலில் சென்று கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் 147 ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் வேண்டுமென்றே விவசாயத்தை பாலாக்குகின்றனர். எனவே தமிழக அரசு இப்பகுதியில் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பதற்கான வழிவகைகள் செய்து தந்து கருகும் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details