தமிழ்நாடு

tamil nadu

ரூ.14 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே கீழ் பாலத்தில் சூழ்ந்த மழை நீர்- அவதியில் பொதுமக்கள்!

By

Published : Nov 28, 2020, 9:53 AM IST

திருவாரூர்: ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்ட ரயில்வே கீழ் பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால், அவற்றை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நீர் தேங்காதவாறு சீரமைத்து மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு உடனே கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

water stagnation in newly constructed railway bridge
water stagnation in newly constructed railway bridge

திருவாரூர் மாவட்டம், ஆண்டிபந்தல் அருகே பொதுமக்கள் நலன் கருதி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 கோடி செலவில் மத்திய அரசின் ரயில்வே துறை சார்பில், ரயில்வே கீழ் பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலத்தை ஆண்டிப்பந்தல், அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

குறிப்பாக, ரயில்வே பாலமானது நாகை, திருவாரூர் எல்லை பகுதியில் கட்டப்பட்டதால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த வடகரை, கொட்டூர், திருப்பனையூர் உள்ளிட்ட கிராம மக்கள் அவசர தேவைகளான மருத்துவமனை, விவசாய பணிகளுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்வதற்கும், ரயில்வே கீழ் பாலத்தைப் பிரதானமாகப் பயன்படுத்தி வந்தனர்.

செலவிடப்பட்ட ரூ.14 கோடி வீண்!
தற்போது ரயில்வே கீழ் பாலத்தின் கான்கிரீட் சுவர்களில் ஏற்பட்ட விரிசலால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிவர் புயலால் பெய்த மழை காரணமாக, பாலம் முழுவதுமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, கீழ் பாலத்தைப் பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரூ.14 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே கீழ் பாலத்தில் சூழ்ந்த மழை நீர்!

ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் சரியான முறையில் கட்டப்படாததால், மழை பெய்யும் நேரங்களில் பாலத்தினுள் நீர் புகுந்து அவற்றை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. சரியான முறையில் திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட பாலத்துக்கு செலவிடப்பட்ட பணம் பயனற்று போய்விட்டதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ரூ.14 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே கீழ் பாலம்!

நாகை சுற்றுவட்டார மக்களின் முக்கிய தேவையான ரயில்வே கீழ் பாலத்தை, மழை காலங்களில் நீர் தேங்காதவாறு அவற்றை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என, அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details