தமிழ்நாடு

tamil nadu

திருவாரூர் வளவனாறு முனாங்காடு தடுப்பணை முதல் கடல் முகத்துவாரம் வரை தூர்வார கோரிக்கை

By

Published : Nov 13, 2021, 3:04 PM IST

Updated : Nov 13, 2021, 4:11 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக வெள்ள நீரால் சூழப்பட்டு, சுமார் 2 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு தோறும் பாதிக்கப்படுவது தொடர்கிறது எனச் சுட்டிக் காட்டிய பி.ஆர். பாண்டியன், மாவட்டத்தை காப்பாற்ற வளவனாறு முனாங்காடு தடுப்பணை முதல் கடல் முகத்துவாரம் வரை தூர்வார வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

thiruvarur-district-is-being-destroyed-pr-pandian-indictment

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் மழை வெள்ள சேதங்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “வளவனாறு அரிச்சந்திரனாறு, வெள்ளையாறு உள்ளிட்ட கடலில் கலக்கக்கூடிய வளவனாறு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் ரூ.950 கோடி மதிப்பீட்டில், 2016இல் முதல் கடல் முகத்துவாரம் நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் தொடங்கின.

எனினும் தற்போதுவரை 60 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. மீதம் 40 சதவீத பணிகளை ஒப்பந்த நிறுவனம் முழுமையாக முடிக்க மறுத்து, ஊழல் முறைகேடு செய்ய முயற்சித்து வருகிறது. மேலும் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பெய்யக்கூடிய மழை வெள்ள நீர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளிலும் ஓடக்கூடிய ஆறுகள் வழியாக வளவனாற்றில கலந்து கடலில் சென்று வடிகிறது. முனாங்காடு தடுப்பணை முதல் கடல் முகத்துவாரம் வரையிலும் ஏழு கிலோ மீட்டர் தூரம் வளவனாறு மணல் மேடிட்டு வெள்ள நீர் வடிவது தடைப்பட்டுள்ளது.


இதனால் திருவாரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக வெள்ள நீரால் சூழப்பட்டு, சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு தோறும் பாதிக்கப்படுகின்றன. குடிசை வீடுகள், குடியிருப்புகள் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது. எனவே, திருவாரூர் மாவட்டத்தை பாதுகாக்க வேண்டுமானால் வளவனாறு முனாங்காடு தடுப்பணை முதல் கடல் முகத்துவாரம் வரையிலும் நவீன இயந்திரங்களைக் கொண்டு முழுமையாக தூர் வார வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : 1036ஆவது சதய விழா: இராஜராஜ சோழனின் சிலைக்கு மரியாதை

Last Updated : Nov 13, 2021, 4:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details