தமிழ்நாடு

tamil nadu

‘ஆறுகளைத் தூர்வாரினால் 3 போகம் விவசாயம் செய்ய முடியும்’ - விவசாயிகள் அறிவிப்பு

By

Published : Mar 6, 2020, 1:13 PM IST

திருவாரூர்: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகள், வாய்க்கால்களை உடனடியாகத் தூர்வாரினால் இந்தாண்டு மூன்று போகம் விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

ஆறுகளை தூர் வாரக் கூறும் விவசாயிகள்
ஆறுகளை தூர் வாரக் கூறும் விவசாயிகள்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் நான்கு லட்சம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இங்கு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் மேட்டூர் அணையின் நீரை நம்பி குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்டவைகளைச் சாகுபடி செய்து மூன்று போகம் விவசாயம் செய்தனர்.

கடந்த பத்தாண்டுகளாக ஜூன் மாதம் பத்தாம் தேதி திறக்கப்படும் தண்ணீர், கடந்த சில ஆண்டுகளாகத் திறக்கப்படாத காரணத்தினால் மூன்று போகம் சாகுபடியானது தற்போது ஒருபோக சாகுபடி ஆக குறைந்துள்ளது. இதனால், இந்தாண்டு மூன்று போகம் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேட்டூர் அணையில் 105 கனஅடி தண்ணீர் தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால், ஜூன் மாதம் இரண்டாம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், இந்தாண்டு மூன்று போகம் சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .

ஆறுகளைத் தூர்வாரக் கூறும் விவசாயிகள்
இந்த நேரத்தைப் பயன்படுத்தி திருவாரூர் மாவட்ட ஆறுகள், சிறு, குறு வாய்க்கால்களைத் தமிழ்நாடு அரசு தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஓடும் ஓடம், போகி ஆறு, திருமலைராயன் ஆறு, வெட்டாறு, பாமணி ஆறு உள்ளிட்ட 23 ஆறுகளையும் அதிலிருந்து பிரியும் ஏ சேனல், பி சேனல், சி சேனல் வாய்க்கால்களைத் தூர்வார தமிழ்நாடு அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
ஆறுகளைத் தூர்வாருவது குறித்து பேசிய விவசாயி
கடந்தாண்டு தூர்வாரும் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது ஆறுகளில் தண்ணீர் வந்த காரணத்தினால் அந்தப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனவே, அந்தப் பணிகளை தற்போது செய்தால் இந்தாண்டு மூன்று போகம் விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details