தமிழ்நாடு

tamil nadu

அரசு வேளாண்துறையில் யூரியா தட்டுப்பாடு! - விவசாயிகள் வேதனை

By

Published : Nov 7, 2019, 7:58 AM IST

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் அரசு வேளாண்துறையில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், தனியார் உரக்கடைகளில் அதிக விலையில் விற்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விவசாயிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த எட்டு ஆண்டுகளாக குறுவை, சம்பா சாகுபாடி பொய்த்து விட்டது. மேலும் இந்தாண்டு விவசாயத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையும் பாசனத்திற்கு செல்லாமல் வீணாகி கடலுக்குள் சென்று கலந்துள்ளது.

தற்போது பெய்த மழையை வைத்து விவசாயிகள் சம்பா பயிர் நடவு செய்துள்ளனர். ஆனால் பயிரிட்டு 25 நாட்களை கடந்தும் அடி உரம் இடுவதற்கு வேளாண்துறையில் யூரியா இல்லாமல் சிறு குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் உரக்கடைகளில் விற்கப்படும் யூரியா பெரு விவசாயிகளுக்கு மட்டுமே அதிக அளவில் விற்கப்படுவதாகவும். சிறு குறு விவசாயிகளுக்கு ஒன்றிரண்டு என்ற குறைந்த எண்ணிக்கையில் கிடைப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து விவசாயி மகேந்திரன் கூறுகையில், "காவிரி தண்ணீர் காலதாமாதமாக வந்தாலும் விவசாயம் செய்துள்ளோம். இந்த நிலையில் நடவு செய்து 25 நாட்களை கடந்தும் யூரியா இன்றி டெல்டா மாவட்டம் முழுவதும் தட்டுபாடு நிலவுவதால் விளைச்சல் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

விவசாயி மகேந்திரன் பேட்டி

அரசு அலுவலர்களும், அமைச்சர்களும் விவசாயிகளை பற்றிக் கவலை படாமல் மெத்தன போக்காக செயல்படுகிறார்கள். உரத் தட்டுப்பாட்டை போக்கவில்லையெனில் விவசாயிகள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க:புதுக்கோட்டையில் யூரியா உரத் தட்டுப்பாடு - கலங்கிய விவசாயிகள்!

Intro:Body:டெல்டா மாவட்டங்களில் அரசு வோண்துறையில் யூரியா தட்டுப்பாடு. தனியார் கடைகளில் அதிகவிலைக்கு விற்பதால் யூரியா கிடைக்காமல் மன்னார்குடியில் விவசாயிகள் கவலை.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை, சம்பா சாகுபாடி பொய்த்து விட்டது. ஆனால் இந்தாண்டு விவசாயத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையும் பாசனத்திற்கு செல்லாமல் வீணாகி கடலுக்கு தான் சென்றுள்ளது. தற்போது பெய்த மழையை வைத்து தான் சம்பா சாகுபடி செய்துள்ளோம். ஆனால் தற்போது சம்பா சாகுபடி செய்து 25 நாட்களை கடந்து அடி உரம் போடுவதற்கு வேளாண் துறையில் யூரியா இல்லாமல் சிறு குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யூரியா உரம் முழுவதும் தனியார் உரக்கடைகளில் லாரி லாரியாக வந்து குவிகிறது. ஆனால் அந்த உரத்தை பெரு விவசாயிகளுக்கு மட்டுமே அதிக விலைக்கு விற்கிறார்கள். ஆனால் சிறு குறு விவசாயிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு மூட்டை உரம் கூட கிடையாது என கூறிவருகின்றனர். எனவே உடனடியாக தமிழக வேளாண்துறை அமைச்சர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உரத் தட்டுபாட்டை போக்கி விவசாயிகளின் வாழ்வாதரத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில்...

காவிரி தண்ணீர் காலதாமாதமாக வந்தாலும் விவசாயம் செய்துள்ளோம். இந்த நிலையில் நடவு செய்து 25 நாட்களை கடந்தும் பயிர் முழுவதும் உரத்திற்கு ஏங்கி கொண்டு இருக்கிறது. பயிர் களை எடுத்தவுடன் பயிர் வளர்வதற்காக யூரியா உரம் தெளிக்கவேண்டும். டெல்டா மாவட்டம் முழுவதும் தட்டுபாடு நிலவுகிறது. ஆனால் பல கடைகளிலும் ஏறி இறங்கியும் யூரியா உரம் கிடைக்கவில்லை. அதிகாரிகளும் அமைச்சர்களும் விவசாயிகளை பற்றி கவலை படாமல் மெத்தன போக்காக செயல்படுகிறார்கள். எனவே உரத் தட்டுப்பாட்டை போக்க வில்லையெனில் விவசாயிகள் ஒன்று திரண்டு தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.

பேட்டி
மகேந்திரன் - விவசாயிகள் சங்கம்
Conclusion:

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details