தமிழ்நாடு

tamil nadu

திருவாரூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது

By

Published : Dec 15, 2021, 8:03 AM IST

திருவாரூர் அருகே சினிமா பாணியில் மூதாட்டியிடம் தங்க்ச் செயினைபறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன்
செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர்: கோட்டூர் காவல் சரகத்தின் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா (71). இவர் டிசம்பர் 6ஆம் தேதி சேரங்குளத்தில் ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மூதாட்டியை வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் மூதாட்டியை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, குடிக்க நீர் கேட்பதுபோல் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளார்.

சினிமா பாணி திருடன் கைது

சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில், கோட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (42) என்பவரே, செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை உடனடியாக கைது செய்த காவலர்கள், மூதாட்டியின் நகையை மீட்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன்

இந்நிலையில் இதனையறிந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி ஆர்.பாண்டியன், நேற்று(டிசம்பர் 14) காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட தனிப்படையினரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.

காவலர்களுக்கு பாராட்டு

பின்னர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருவாரூர் மாவட்டத்தில் சமீபகாலமாக வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றன. இதனை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் பல்வேறு குழுக்களை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையிலேயே மூதாட்டியின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற திருடனை கைது செய்ததுடன், நகையையும் மீட்டுள்ளனர். இச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. அதன் காரணமாகவே காவலர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினோம்” என்றார்.

இதையும் படிங்க:கார் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து: முதியவர் பலத்த காயம்!

ABOUT THE AUTHOR

...view details