தமிழ்நாடு

tamil nadu

தம்பி மனைவியை கொலை செய்த அண்ணன் கைது!

By

Published : Jan 19, 2021, 10:54 PM IST

திருவாரூர்: இ.வி.எஸ். நகரில் தம்பி மனைவியை கொலை செய்த அண்ணணை காவல் துறையினர் கைது செய்தனர்.

தம்பி மனைவியை கொலை செய்த அண்ணன் கைது
தம்பி மனைவியை கொலை செய்த அண்ணன் கைது

திருவாரூர் இ.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (39). இவருடைய மனைவி சொர்ண பிரியா (34). இவர்கள் இருவரும் பெங்களுரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கரோனா காரணமாக திருவாரூரில் தங்கி ஆன்லைன் மூலமாக அலுவலக வேலை பார்த்து வந்தனர். சுந்தரமூர்த்தியின் அண்ணன் ராஜகோபால் (41). இவருடைய மனைவி திவ்யா. இவருவரும் நாகை மாவட்டம் திருகண்ணபுரத்திலுள்ள தனியார் நர்சரி, பிரைமரி பள்ளி வைத்து நடத்தி வருகின்றனர்.

ராஜகோபால் அப்பள்ளியின் தாளராகவும் பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் அண்ணன், தம்பி இருவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில், இந்த பள்ளிக்காக தம்பி சுந்தரமூர்த்தி 15 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.17) இரவு ராஜகோபாலுக்கும், தம்பி மனைவி சொர்ணபிரியாவிற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் சொர்ணபிரியா கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து விழுந்தவரை குடும்பத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அவரை பரிசோதித்த மருத்துவர் சொர்ணபிரியா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர்.

இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி உயிருடன் தீ வைத்து எரிப்பு

ABOUT THE AUTHOR

...view details