தமிழ்நாடு

tamil nadu

திருவாரூரில் விநாயகர் சிலை வைத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு!

By

Published : Aug 21, 2020, 4:39 PM IST

திருவாரூர்: மாவட்டத்தில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

விநாயகர்
விநாயகர்

கரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் வரும் 31ஆம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ கூடாது என தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அவரவர் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடையை மீறி சில பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, நீடாமங்கலம்,கோட்டூர் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறை உத்தரவின் பேரில் காவல் துறையினர் இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் அங்கிருந்த விநாயகர் சிலைகள் மற்றும் அதனை எடுத்து செல்ல பயன்படுத்திய மினி லாரியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details