தமிழ்நாடு

tamil nadu

வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் நெல் கொள்முதல் நிலைய கட்டணம்!

By

Published : Feb 17, 2021, 10:32 AM IST

திருவாரூர்: பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலிருந்து  மீண்டு மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால் அங்கு வசூலிக்கப்படும் கட்டணமோ 'வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல' இருக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நெல் கொள்முதல் நிலைய கட்டணம் உயர்வு - விவசாயிகள் வேதனை
நெல் கொள்முதல் நிலைய கட்டணம் உயர்வு - விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 468 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு விவசாயிகளின் நெல் மூட்டைக்கு 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக விசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

'வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல'

மேலும் இது குறித்து பேசிய விவசாயிகள், "இந்த ஆண்டு நிவர், புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி அழுகி முளைத்தது. மீதமுள்ள நெற்பயிர்களை அறுவடை செய்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால் மூட்டை ஒன்றுக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு 10ரூபாய் உயரத்தி 40 ரூபாய் வசூலிக்கின்றனர்.

நெல் கொள்முதல் நிலைய கட்டணம் உயர்வு - விவசாயிகள் வேதனை

பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் மீண்டு மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தால் இங்கு வசூலிக்கும் கட்டணம் கொடுமையாக இருக்கிறது. "வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல்" கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதனால் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.1.50 லட்சம் மின்கட்டணம்: அதிர்ச்சியின் விரக்தியில் விவசாயி தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details