தமிழ்நாடு

tamil nadu

கூடுதல் அறுவடை இயந்திரங்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை

By

Published : Aug 9, 2021, 10:38 AM IST

நன்னிலம் அருகே குறுவை சாகுபடிக்கு நெல் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு நிலவிவருவதால் கூடுதல் இயந்திரங்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

nannilam-paddy-cultivation-mechine-demand
nannilam-paddy-cultivation-mechine-demand

திருவாரூர்: நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சுமார் 17 ஆயிரம் ஹெக்டேர் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு இருப்பதால் நெல் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக நெல்மணிகள் வயலில் சாய்ந்து சேதமடைந்து வீணாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் ஏழு மட்டுமே உள்ளதால் பதிவு செய்தும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. தனியார் அறுவடை இயந்திரங்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

விவசாயிகள் கோரிக்கை

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் கூடுதல் அறுவடை இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திருவள்ளூர் பேருந்து நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details