தமிழ்நாடு

tamil nadu

Hanuman Jayanthi: மன்னார்குடி ஞானபுரீ கோயில்: அனுமன் ஜெயந்தி விழாவில் கீர்த்தனைகள் பாடி வழிபாடு

By

Published : Jan 2, 2022, 8:20 PM IST

Hanuman Jayanthi: மன்னார்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஞானபுரீ கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவில் பக்தர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி ஆஞ்சநேயர் தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி விழா
அனுமன் ஜெயந்தி விழா

திருவாரூர்: Hanuman Jayanthi: மன்னார்குடி - ஆலங்குடி குரு ஸ்தலம் அருகே திருவோணமங்கலம் கிராமத்தில் ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தின் ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வலதுபுறம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரும், இடதுபுறம் ஸ்ரீ கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமியும் எழுந்தருளியுள்ளனர்.

உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகை உடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சங்கடம் தீர்க்கும் ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் சுவாமி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் சங்கடங்களை நீக்கி மங்கலம் அருள்பவராக இங்கு எழுந்தருளியுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் மார்கழி அமாவாசை மூல நட்சத்திரம் கூடிய ஜனவரி 2ஆம் நாளான இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, ஆஞ்சநேயர் சுவாமி பச்சைப்பட்டு உடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா பிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகளின் முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்கத் தீபாராதனை நடத்தப்பட்டன.

கீர்த்தனைகள் பாடி தரிசனம்
இதைத் தொடர்ந்து, மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தைப் பிரசாதமாக வழங்கினார். இதில், திரளான பக்தர்கள் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடி அனுமனை ஆராதித்தனர்.

அனுமன் ஜெயந்தி விழா ஏற்பாடுகளைக் கோயில் தர்மகர்த்தா ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர், அறங்காவலர் ஜெகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

மன்னார்குடி ஞானபுரீ கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா


இதையும் படிங்க: திருச்சியில் அனுமனுக்கு பிரம்மாண்ட வடைமாலை

ABOUT THE AUTHOR

...view details